3வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி

3வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி
sa
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் டீகாக் மிக அபாரமாக விளையாடி 118 பந்துகளில் 103 ரன்களும், மில்லர் 33 ரன்களும் எடுத்தனர். பின்னர் டீபிளஸ்ஸிஸ் 60 ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்தது.

271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 65 ரன்கள் எடுத்தார். விராத் கோஹ்லி 77 ரன்களும் கேப்டன் தோனி 47 ரன்களும் எடுத்தபோதிலும் பின்னர் வந்த வீரர்கள் பொறுப்பற்ற முறையில் ஆடியதால் இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 252 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆட்டநாயகன் விருதை தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர் மோர்க்கல் பெற்றார்.

Leave a Reply