ஆயுதபூஜை விடுமுறையில் திடீர் மாற்றம். தமிழக அரசு அறிவிப்பு
ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு நாளை முதல் ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக வங்கிகளுக்கு விடுமுறை என ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில், வங்கிகளுக்கு புதன், வியாழன் ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை என்றும், வெள்ளிக்கிழமை வழக்கம்போல் வங்கிகள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மொஹரம் பண்டிகை என்பதால் அன்றைய தினம் விடுமுறை என்றும் கூறப்பட்டுள்ளது.
முதலில் வரும் வெள்ளியன்றுதான் மொஹரம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசு தலைமை ஹாஜி, வரும் சனிக்கிழமைதான் மொஹரம் என்று தமிழக அரசிடம் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து மொஹரம் தினத்தின் விடுமுறையை வெள்ளிக்கிழமையில் இருந்து சனிக்கிழமைக்கு மாற்றி தமிழக அரசு நேற்று ஆணை பிறப்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.;
இதேபோல், வங்கிகள் அனைத்தும் வரும் வெள்ளிக்கிழமை (அக்.-23) செயல்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வரும் சனிக்கிழமை (அக்.-24) 4-வது சனிக்கிழமை என்பதால், அன்றைய தினம் வங்கிகள் அனைத்திற்கும் விடுமுறை நாளாகும். வெள்ளிக்கிழமை மட்டும் ஒருநாள் வேலைநாள் என்பதால் வெளியூர்களுக்கு செல்லும் ஊழியர்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது.