அர்னால்டை அடுத்து இந்தியாவிற்குள் நுழையும் மற்றொரு ஹாலிவுட் நடிகர்
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ‘எந்திரன் 2’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் வில்லனாக ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்ட் நடிக்கவுள்ள நிலையில் அர்னால்டுக்கு சமமான மற்றொரு ஹாலிவுட் நடிகரான சில்வெர்ஸ்டர் ஸ்டாலோன், சல்மான்கான் படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
சல்மான்கான் நடிக்கவுள்ள ‘சுல்தான்’ படத்தின் வில்லன் கேரக்டர் மிகவும் பவர்புல் என்பதால் இந்த கேரக்டருக்கு பல நடிகர்களை பரிசீலித்த படக்குழுவினர் தற்போது ஹாலிவுட் நடிகர் சில்வெர்ஸ்டர் ஸ்டாலோனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
சல்மான்கான் நடித்த பல படங்களை சில்வெர்ஸ்டர் ஏற்கனவே பாராட்டியுள்ளதால், அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.