நார்வே தலைநகர் ஆஸ்லோவின் மேயராக தமிழ்ப்பெண் போட்டியின்றி தேர்வு
கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ பதவி முதல் உலகின் பெரிய பதவிகளில் தமிழர்கள் இடம் பெற்று வருவதை அவ்வப்போது வரும் செய்திகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது நார்வே நாட்டின் தலைநகரான ஆஸ்லோ நகரின் துணை மேயராக தமிழ்ப் பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஈழத்தமிழ் பெண்ணான அவரது பெயர் கம்சாயினி குணரட்ணம் ஆகும்.
நார்வே நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில்தொழிலாளர் கட்சியின் ஆஸ்லோ மாநகர கிளை துணைத் தலைவர் மற்றும் இளைஞர் பிரிவு தலைவராக இருக்கும் கம்சாயினி குணரட்னம் அவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இலங்கையில் பிறந்த இவர் 3 வயதில் பெற்றோருடன் நார்வேக்கு அகதியாக வந்தவர். தற்போது 27 வயதில் தலைநர் ஒஸ்லோவின் துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு நார்வே தொழிலாளர் கட்சியின் இளைஞர் மாநாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 72 பேர் பலியாகினர். இத்தாக்குதலில் உயிர் தப்பியவர் கம்சாயினி குணரட்னம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்லோ நகர மேயராக தேர்வு செய்யப்பட்ட ஈழத்தமிழ் பெண்ணுக்கு உலகெங்கிலும் உள்ள தமிழ்மக்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.