சென்னையில் கிரிக்கெட் போட்டி. இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே மூன்று ஒருநாள் போட்டிகள் முடிவடைந்த நிலையில் நேற்று சென்னையில் 4வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளும் 2-2 என்று சம விகிதத்தில் உள்ளது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். விராத் கோஹ்லி அற்புதமாக விளையாடி 138 ரன்கள் எடுத்தார். சுரேஷ் ரெய்னா 53 ரன்களும், ரஹானே 45 ரன்களும் எடுத்ததால், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்தது.
300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 264 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. டிவில்லியர்ஸ் 112 ரன்களும், டீகாக் 43 ரன்களும் எடுத்தனர். ஆட்டநாயகனாக விராத் கோஹ்லி தேர்வு செய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 5ஆம் ஒருநாள் போட்டி வரும் 25ஆம் தேதி மும்பையில் நடைபெறும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.