இந்தியாவில் புல்லட் ரயில் திட்டம். ரூ.98,000 கோடி கடன் வழங்குகிறது ஜப்பான்
இந்தியாவில் விரைவில் உருவாகவுள்ள புல்லட் ரயில் திட்டத்துக்கு ஜப்பான் நிதி உதவி செய்ய முன்வந்திருப்பதாகவும் இந்த திட்டத்திற்கு செலவாகும் என மதிப்பிடப் பட்டுள்ள ரூ ரூ.97,680 கோடி நிதியை ஒரு சதவீத வட்டிக்கு கொடுக்க ஜப்பான் முன்வந்திருப்பதாகவும் மத்திய அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மும்பை அகமதாபாத் இடையேயான 505 கிலோமீட்டர் திட்டத்துக்கு பல நிறுவனங்கள் அதிக வேக தொழில்நுட்பத்தை கொடுத்தாலும் தொழில்நுட்ப உதவி மற்றும் நிதி ஆகிய இரண்டையும் ஜப்பான் கொடுப்பதற்கு முன்வந்துள்ளதாகவும் அதனால் ஜப்பானுக்குதான் இந்த திட்டத்திற்கு முன் உரிமை கொடுக்க முடியும் என்று இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவர் ஏ.கே மிட்டல் தெரிவித்துள்ளர்.
இந்தியாவின் முக்கியமான நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களை அதிக வேக புல்லட் ரயில்கள் மூலம் இணைப்பதுதான் இந்த திட்டத்தைன் நோக்கம் என்றும் இந்ட திட்டம் மொத்தம் 10,000 கிலோமீட்டர்கள் என்றும் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
புல்லட் ரயில் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் 7 மணி நேர பயண நேரத்தை 2 மணி நேரமாக குறைக்க முடியும் என்றும் இந்த திட்டத்தை செயல்படுத்த 11 புதிய குகைகள் உருவாக்கப்பட வேண்டி இருக்கும் என்றும் அதில் ஒன்று கடலுக்கு அடியில் உருவாக்கப்படும் பாதை என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். .
இன்னும் சில வாரங்களில் இந்த திட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என்று இந்திய ரயில்வே துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த திட்டம் நிறைவேற்ற அதிக பணம் தேவைப்படும், பல துறைகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. அதனால் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். இதற்கு முன்பு இந்திய ரயில்வே இவ்வளவு பெரிய திட்டத்தை நிர்வகித்ததில்லை என்று இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவர் ஏ.கே மிட்டல் தெரிவித்துள்ளர்.