இளம்பெண்ணுடன் தகாத உறவு வைத்த சர்வாதிகாரி முசோலினி பேத்தி கணவருக்கு ஜெயில்.

இளம்பெண்ணுடன் தகாத உறவு வைத்த சர்வாதிகாரி முசோலினி பேத்தி கணவருக்கு ஜெயில்.
Alessandra-Mussolini-e-Mauro-Floriani
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லருடன் இணைந்து போரில் ஆதிக்கம் செலுத்திய சர்வாதிகாரி பெனிடோ முசோலினி. இவரது பேத்தியின் கணவர் மீது பதிவு செய்யப்பட்ட செக்ஸ்’ வழக்கு ஒன்றில் அவருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சர்வாதிகாரி முசோலினியின் பேத்தி அலெசாண்ட்ரா முசோலினி. இவர் இத்தாலி நாட்டின் சிறப்பு மிக்க கன்சர்வேடிவ் கட்சியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். இவரது கணவர் மயுரோ புளோரியானி. இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் மயுரோ புளோரினி வயது குறைந்த இளம் பெண் ஒருவருடன் ‘செக்ஸ்’ உறவு கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது கடந்த சில மாதங்களாக கற்பழிப்பு வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையில் தற்போது இத்தாலி நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்து அவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், 1800 யூரோ அபராதமாக விதித்து தீர்ப்பளித்தது. சர்வாதிகாரி முசோலினியின் பேத்தியின் கணவருக்கு செக்ஸ் வழக்கில் தண்டனை அளித்த தீர்ப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English Summary: Husband of #Mussolini’s grand-daughter likely to face trial for allegedly paying for sex with teenage prostitutes.

Leave a Reply