மெக்சிகோ நாட்டில் வரலாறு காணாத புயல்-மழை. இயல்பு வாழ்க்கை பாதிப்பு
[carousel ids=”74020,74021,74022,74023,74024,74025,74026,74027,74028,74029,74030,74031,74032,74033″]
மெக்சிகோ நாட்டில் கடுமையான புயலுடன் கூடிய மழை பெய்து வருவதால் அங்குள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 156 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் ஆங்காங்கே மரங்களும் மின் கம்பங்களும் சாலையில் நடுவில் விழுந்துள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இந்த புயலுக்கு ‘பாட்ரிக்கா’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மெக்சிகோவின் இமிலியானோ ஜபாதா என்ற பகுதியில் திடீரென கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் பசிபிக் கடல் பிராந்தியத்தில் 5 மீட்டர் அளவுக்கு அலைகள் ஆக்ரோஷமாக எழுவதாகவும், கடற்கரை பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இமிலியானோ ஜபாதா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
English Summary: Hurricane Patricia is still ‘extremely dangerous’ despite being downgraded to a Category 4 storm, officials warned last night.