கார்ட்டுனிஸ்ட் மதன், கேஷவ் மற்றும் ஓவியர் சங்கர் ஆகியோர்களுக்கு வாழ்நாள் சாதனை விருது.

கார்ட்டுனிஸ்ட் மதன், கேஷவ் மற்றும் ஓவியர் சங்கர் ஆகியோர்களுக்கு வாழ்நாள் சாதனை விருது.
cartoon
இந்தியாவிலிருந்து வெளி வரும் ஒரே கார்ட்டூன் மாத இதழ் என்ற பெருமை கொண்டது கார்ட்டூன் வாட்ச். இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வெளிவரும் இந்த இதழ் வருடந்தோறும் சிறப்பாக கார்ட்டூன் வரைபவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது மூத்த ஓவியர் சங்கர், கார்ட்டூனிஸ்ட்டுகள் மதன், கேஷவ் ஆகியோருக்கு வழங்கப்படவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த விருது வழங்கும் விழா இன்று மாலை 6 மணிக்கு மாலை சென்னை தியாகராய நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா பள்ளியில் நடைபெறவுள்ளது.  

இதுவரை, ஆர்.கே. லக்‌ஷ்மண், பால்தாக்கரே, பிரான், அபித்சுர்தி, அஜித் நைனன், சுரேந்திரா ஆகிய கார்ட்டூன் கலைஞர்கள் இவ்விழாக்களில் கவுரவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த முறை விருது பெறும் ஓவியர் சங்கர், ‘சந்தமாமா’ குழுமத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவர். ‘அம்புலிமாமா’ இதழில் ‘விக்ரமாதித்தன் வேதாளம்’ உள்ளிட்ட கதைகளுக்கு அவர் வரைந்த ஓவியங்கள் தலைமுறைகள் தாண்டி உயிர்ப்புடன் இருக்கின்றன. தனது 92-வது வயதிலும் ‘ராமகிருஷ்ண விஜயம்’ இதழுக்குத் தொடர்ந்து ஓவியங்கள் வரைந்து வருகிறார்.

புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட் கலைஞரும் பத்திரிகையாளருமான மதன் பன்முகம் கொண்ட கலைஞர். ஆனந்த விகடனில் அவர் வரைந்த கார்ட்டூன்கள், உருவாக்கிய நகைச்சுவை பாத்திரங்கள், எழுதி வந்த தொடர்கள் இன்றும் வாசகர்கள் மனதில் நிற்பவை.

வங்கி அதிகாரியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஓவியத்தின் மீதிருந்த காதலால், வங்கிப் பணியை உதறிவிட்டு ‘தி இந்து’ (ஆங்கிலம்) இதழில், 1987-ல் கார்ட்டூனிஸ்ட்டாகப் பணியில் சேர்ந்தவர் கேஷவ். சமூக, அரசியல் தொடர்பான கார்ட்டூன்கள் மட்டுமல்லாமல், கிருஷ்ணர் உள்ளிட்ட தெய்வ உருவங்களை வரைவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

English Summary: A day-long ‘Cartoon Utsav’ will be organised by monthly magazine Cartoon Watch on the occasion of its 19th anniversary in Chennai on Saturday.

Leave a Reply