அன்புமணியை ஏற்றுக்கொண்டால் தேமுதிகவுடன் கூட்டணி. ராமதாஸ்

அன்புமணியை ஏற்றுக்கொண்டால் தேமுதிகவுடன் கூட்டணி. ராமதாஸ்
ramdoss
அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டால், தேமுதிகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க தயார் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதற்கு விஜயகாந்த் ஒப்புக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

இதுகுறித்து நேற்று டாக்டர் ராமதாஸ் தைலாபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது கூறிகையில், “பாமக சார்பில் மாதிரி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை மக்களிடம் விளக்கும் வகையில் பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.

அப்போது மீனவர்கள், தொழில் அதிபர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து பேசி அவர்களின் கருத்துக்களை கேட்டு அறிவார். பின்னர் அதன் அறிக்கையை கட்சி தலைமைக்கு தாக்கல் செய்வார். அதையடுத்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எங்கள் கட்சி சார்பில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளோம். இதை ஏற்று தேமுதிக எங்களோடு கூட்டணிக்கு வந்தால் அதை ஏற்றுக் கொள்வோம்.

ரூ.1500 கோடிக்கு சீனப் பட்டாசுகளை இறக்குமதி செய்துள்ளனர். பொம்மைகள் என்ற பெயரில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதை கண்டுபிடித்து பறிமுதல் செய்ய வேண்டும். காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறந்து விடாததால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் தங்களிடம் தண்ணீர் இருப்பு குறைவாக இருப்பதாக கூறுகிறார்கள்.

எனவே, இடர்பாடு காலங்களில் தண்ணீரை எப்படி பகிர்ந்து கொள்ள வேண்டுமோ அதுபோல் பகிர்ந்துகொள்ள வேண்டும். விலைவாசி உயர்வு, மீனவர் பிரச்னை போன்ற பல்வேறு பிரச்னைகள் இருக்கிற நேரத்தில்  ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வு எடுக்கிறார். அவர் கடந்த 156 நாட்களில் ஒரு தடவைதான் அமைச்சரவை கூட்டத்தையே கூட்டி இருக்கிறார்.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply