214 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி. தொடரை வென்றது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. தென்னாப்பிரிக்க அணியின் டீகாக் 109 ரன்களூம், டீபிளஸ்ஸிஸ் 133 ரன்களும் மற்றும் டிவில்லியர்ஸ் 119 ரன்களும் எடுத்தனர். இதனால் தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 438 ரன்கள் குவித்தது.
439 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 36 ஓவர்களில் 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரஹானே 87 ரன்களும், தவான் 60 ரன்களும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றது. ஏற்கனவே 20-20 தொடரையும் இந்த அணி இந்தியாவுக்கு எதிராக வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டீகாக் ஆட்டநாயகனாகவும், டிவில்லியர்ஸ் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
English Summary: South Africa won by 214 runs against India at 5th ODI in Mumbai