பாண்டவர் அணி என்பது இனி இல்லை. ஒரே அணியாக செயல்படுவோம். விஷால்
கடந்த வாரம் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் முழு வெற்றியை பாண்டவர் அணி, நேற்று முதல் செயற்குழு கூட்டத்தை கூட்டத்தை கூட்டியது. சென்னை வடபழநியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேசிய நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால், ‘நடிகர் சங்கத்தில் இனி பாண்டவர் அணி என்பது இருக்காது அனைவரும் ஒரு அணியாக இணைந்து செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளார்.
தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் தேர்தலுக்கு முன்பு இரண்டு அணியாக இருந்தபோதிலும் இனி பாண்டவர் அணி என்ற அணியேதும் இருக்காது என்றும், ஒரே அணியாக நடிகர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு நடிகர்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவோம் என்றும் கூறினார்.
மேலும் எஸ்.பி.ஐ. ஒப்பந்தம், நடிகர் சங்க கட்டடம் குறித்த விவகாரங்கள் மற்றொரு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிவித்த நடிகர் விஷால் தேர்தலை சிறப்பாக நடத்த உதவியை தமிழக முதலமைச்சர் மற்றும் காவல்துறைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு புதிய நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். இயக்குனர்கள் சங்கமும் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary: No Pandavar Ani in future. Actor Vishal