புலி’யின் நஷ்டத்தை ஈடுகட்டுமா விஜய் 59?

புலி’யின் நஷ்டத்தை ஈடுகட்டுமா விஜய் 59?
Puli-Movie-Unseen-Photos-10
கடந்த 1ஆம் தேதி விஜய், ஸ்ருதிஹாசன் நடிப்பில் சிம்புதேவன் இயகக்த்தில் வெளியான ‘புலி’ திரைப்படம் தமிழகதில் மட்டுமின்றி விஜய் ரசிகர்கள் அதிகம் உள்ள கேரளாவிலும் குறைந்த அளவே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் தற்போது கேரளாவில் கிட்டத்தட்ட அனைத்து திரையரங்குகளிலும் தூக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

விஜய் நடித்த படங்களிலேயே கேரளாவில் மிகவும் குறைவாக வசூல் செய்த படம் ‘புலி’ என்று விநியோகிஸ்தர்கள் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனாலும் 2015ஆம் ஆண்டின் கேரளா பாக்ஸ் ஆபீஸ் நிலவரத்தில் ‘ஐ’, பாகுபலி படங்களை அடுத்து ‘புலி’ படம் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது மட்டும் ஒரு ஆறுதல்

தமிழகம், கேரளா உள்பட அனைத்து மாநிலங்களிலும், வெளிநாட்டிலும் ‘புலி’ படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவு இல்லை என்பதால், விஜய் நடிப்பில் தற்போது உருவாகிவரும் விஜய் 59′ படத்தை குறைந்த விலைக்கு தர விஜய்யிடம் விநியோகிஸ்தர்கள் வேண்டுகோள் வைத்திருப்பதாகவும், விஜய்யும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply