பாதுகாப்பான தீபாவளிக்கு ஸ்ருதிஹாசன் தரும் டிப்ஸ்
வரும் நவம்பர் 10ஆம் தேதி அனைவரும் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடவுள்ள நிலையில், பாதுகாப்பான தீபாவளி கொண்டாட்டம் குறித்து தமிழக தீயணைப்புத்துறை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் உலக நாயகன் கமல்ஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன், தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்கும்போது செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கூறியுள்ளார். ஸ்ருதிஹாசன் கூறியதை இப்போது பார்ப்போம்.
1. கவனக்குறைவாக பட்டாசு வெடித்ததால் சென்ற வருடம் மட்டும் 92 பேர் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டனர்.
2. பட்டாசு வெடிக்கும் போது துப்பட்டா, பட்டுப் பாவாடை அணிவதைத் தவிர்த்து, இறுக்கமான காட்டன் உடை அணிவோம்
3. அதுமட்டுமில்லாமல் காலணிகளை அணிய மறக்கவேண்டாம்.
4. புஸ்வானம் போன்ற வெடிகளை தரையில் வைத்து கொளுத்துவதே அழகு. கையில் அல்ல.
5. பட்டாசு பதுகாப்பாக வெடிக்க நீண்ட வத்தியே நல்லது
6. வெடிக்காத பட்டாசை கையில் எடுக்காதீர்கள்.
7. திறந்த வெளியில் தீபாவளியை பட்டாசுடன் கொண்டாடுவது தான் உங்களுக்கும், உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பாதுகாப்பு
8. குழந்தைகள் எல்லாம், கண்டிப்பா பெரியவர்கள் மேற்பார்வையில் தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்
9. பட்டாசு வெடிக்கும் போது ஒரு வாளி தண்ணீர் பக்கத்தில் இருப்பது அவசியம்.
10. ஒரு வேளை தீ ஏற்பட்டால் உடனே குளிர்ந்த நீரை ஊற்றுங்கள். அல்லது கீழே விழுந்து உருண்டு புரண்டு அணையுங்கள்.
11. ஏதும் அவசரம் என்றால் தீயணைப்புத் துறையின் 101 அல்லது 102 என்ற எண்ணுக்கு அழையுங்கள்!
ஸ்ருதிஹாசன் கூறிய மேற்கூரிய அறிவுரைகளை கடைபிடித்து பாதுகாப்பான தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.
English Summary: SAFE DIWALI 2015 – TAMIL NADU FIRE and RESCUE SERVICES