கைகளில் முத்திரைகள் வைப்பதால் என்ன பயன்?

images

ஒரு கட்டுப்பாட்டு கேந்திரமாக செயல்படும் திறனுடைய மனிதனின் கைகள் மற்றும் முத்திரைகள் பின்னால் உள்ள அறிவியல் சத்குருவின் பார்வையில்… சத்குரு: இந்த உடல் அமைப்பில் சரியான செயல்களை செய்தால், நீங்கள் வாழ்க்கையில் அற்புதமான விஷயங்களை செய்ய முடியும். முத்திரை என்றால் பூட்டு என்று பொருள். கைகள் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருப்பது. முத்திரைகள், உங்களது உடலை குறிப்பிட்ட ஒழுங்குபடுத்தும் ஒரு நுட்பமான அறிவியல். உங்கள் உள்ளங்கையின் நிலையை மாற்றுவதன் மூலம், உங்கள் உடல் செயல்படும் விதத்தை மாற்றமுடியும். இந்த அடிப்படையில், உடலின் வடிவியல் மற்றும் சுற்றமைப்பு இவற்றை உள்ளடக்கிய, ஒரு முழுமையான அறிவியல் இது. ஒரு குறிப்பிட்ட முத்திரையை கையில் வைத்துகொள்வதால், சக்தி ஒரு குறிப்பிட்ட வழியில் நகரும். யோகத்தில், உங்கள் மூச்சை ஒரு குறிப்பிட்ட வழியில், ஒரு சில எண்ணிக்கைகள் மற்றும் விகிதம் மூலம் சீராக்கும் முறைகள் உள்ளன. இப்படி செய்வதன் மூலம், நீங்கள் விரும்பினால் உங்கள் உடம்பில் உள்ள குறிப்பிட்ட எந்த உயிரணுவுக்கும் சக்தியை செலுத்த முடியும். பிரபஞ்சத்தை திறக்கும் முத்திரை உண்பது, உடல் சார்ந்த வேலை செய்வது தவிர பல செயல்களை செய்யக் கூடிய திறன் கைகளுக்கு உள்ளது, உங்கள் கைகளை எப்படி உருவாக்க முடியும் என்றால்,

Kubera

இங்கே நீங்கள் உங்கள் கைகளை அசைத்தால், வேறு எங்கோ எதோ ஒன்று நடக்குமாறு செய்ய முடியும். ஏனெனில், அனைத்துக்கும் கைகள் கருவியாக இருப்பதனால். ஒரு “கட்டுப்பாட்டு கேந்திரம்” போல் உள்ளது. இந்த மனித உடல் அமைப்பால் ஒரு சாதாரண மனிதராக வாழமுடியும் அல்லது இதை ஒரு மிக சிறந்த சாத்தியமாக விரிவாக்கி கொள்ளமுடியும். எப்படி இருந்தாலும் சரி, கட்டுப்படுத்தும் கேந்திரம் இங்குதான் உள்ளது. இந்த உடல் அமைப்பில் சரியான செயல்களை செய்தால், நீங்கள் வாழ்க்கையில் அற்புதமான விஷயங்களை செய்ய முடியும். தீவிரமான தேடலும், சாதனாவும் இதற்கு மிக அவசியம். பலவகையான முத்திரைகள் ஆரோக்கியத்திற்காக சில, நன்மைக்காக சில, குறிப்பிட்ட சில வகையான செயல்முறைகள் உருவாக்க சில என்று நூற்றுக்கணக்கான முத்திரைகள் உள்ளன. வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களுக்கு வெவ்வேறு விதமான முத்திரைகள் உள்ளன. இந்திய கலாச்சாரத்தில், ஒரு மனிதன் தன்னுள் சிறந்து விளங்கிட, குறிப்பிட்ட ஆசனம், முத்திரை மற்றும் குறிப்பிட்ட வகையான சுவாசத்தை அடையாளம் கண்டு கொண்டுள்ளனர். இது இந்த கலாச்சாரத்தில் இன்னும் நடைமுறையில் உள்ளது, ஆனால், தேவையான புரிதலும், விழிப்புணர்வும் இல்லாத ஒரு பயிற்சியாகவே செய்யப்படுகிறது.

Leave a Reply