விஷாலுக்கு மேலும் ஒரு வெற்றி. விரைவில் ரிலீஸ் ஆகிறது எம்.ஜி.ஆர்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய பொதுச்செயலாளராக பதவியேற்ற விஷால், நடிகர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் விஷால் நடிப்பில் பல மாதங்களாக பெட்டிக்குள் முடங்கியிருக்கும் எம்ஜிஆர் என்னும் ‘மதகத ராஜா’ என்ற படத்திற்கு தற்போது விடிவுகாலம் வந்துள்ளது. இந்த படத்தின் தெலுங்கு உரிமையை ஆந்திராவின் பிரபல நிறுவனமான Sri Obuleswara என்ற நிறுவனம் என்ற நிறுவனம் பெற்றுள்ளதாகவும், இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் பணிகள் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது நடிகர் சங்கம் விஷாலின் கட்டுப்பாட்டில் உள்ளதால் விஷாலுடன் இணக்கமாக செயல்பட பல பைனாசியர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதால் ‘மதகஜ ராஜா’ படத்தின் பிரச்சனை விரைவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சதா, சந்தானம் உள்பட பலர் நடித்திருந்த ‘மத கஜ ராஜா’ என்ற படத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார். ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார்.