சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எப்படி?

27ca54b9-34b1-492a-81fb-18dd2e4ada07_S_secvpf

சர்க்கரை நோய் பரம்பரையில் வருவதாயினும், நம் செயல்பாட்டால் வருவதாயினும் சர்க்கரை நோயை கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றி வந்தால் வராமல் தடுக்கலாம்.

• சீனிக்குப் பதிலாக நாட்டுவெல்லம் அல்லது பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி பயன்படுத்தலாம்

• அரிசி சோற்றைக் குறைத்து காய்கறி, பழங்களை அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

• இரவில் ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட வேண்டும்.

• பாகற்காயை வாரம் மூன்று நாட்கள் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

• நாவல்பழம் கிடைக்கும் காலத்தில் தவறாது சாப்பிடுதல். நான்கைந்து விதைகளையும் மென்று சாப்பிட வேண்டும்.

• முள்ளங்கி தவிர மற்ற கிழங்கு வகைகளை கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டும்.

• வெள்ளரிப் பிஞ்சு, கோவைக்காய் உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

• கண்டிப்பாக நாள்தோறும் வியர்க்கும் அளவிற்கு ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் நடைப்பயிற்சியை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

• கொழுப்பு உணவுகளைத் அறவே தவிர்க்க வேண்டும்.

• பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளை முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும். சுவைக்காக உண்ணாது நலத்திற்காய் உண்ண வேண்டும்.

இளமை முதல் இவற்றைப் பின்பற்றினால் சர்க்கரை நோய் வராது. சர்க்கரை நோய், சர்க்கரை சாப்பிடுவதால் வருவதல்ல; கணையம் பாதிக்கப்படுவதால் வருவது. சர்க்கரை நோயாளிகள்தான் இனிப்பைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் அளவோடு இனிப்பு உண்ணலாம். முன்னெச்சரிக்கையோடு வாழ்ந்தால் இந்நோயால் பாதிப்பு வரவே வராது.

 

 
 

Leave a Reply