பீகாரில் பாஜக தோற்றால் பாகிஸ்தான் கொண்டாடுமா? அமீத் ஷாவின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம்
பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் தற்போது நான்காவது கட்ட தேர்தலுக்கு தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பாஜகவின் தேசிய தலைவர் அமீத் ஷா பீகாரில் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அமீத்ஷா பேசியபோது, ”முதல்வர் நிதீஷ் குமார்-லாலு பிரசாத் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருமானால், கிரிமினல் அரசியல்வாதியான முகமது சகாபுதீன் போன்றோருக்குத்தான் பயனுள்ளதாக அமையும். மேலும், பீகாரில் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்டு ஆட்சி அமைக்க முடியாமல் போகுமானால், பாகிஸ்தான் அதனை வெடி வெடித்துக் கொண்டாடும்’ என்று கூறினார்.
அமித் ஷாவின் இந்தப் பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யூ.) கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
English Summary: If BJP loss in Bihar, Pakistan will celebrate says Amith Shah