பத்தே மாதங்களில் 2வது மனைவியை விவாகரத்து செய்கிறார் இம்ரான்கான்

பத்தே மாதங்களில் 2வது மனைவியை விவாகரத்து செய்கிறார் இம்ரான்கான்
imran khan
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தெஹ்ரிக் இ இன்சாப் என்னும் கட்சியின் தலைவருமான இம்ரான்கான், கடந்த ஜனவரி மாதம் லண்டனை சேர்ந்த ரெஹாம்கான் என்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்தார். ஆனால் திருமணம் ஆன பத்தே மாதங்களில் இம்ரான்கான் தனது மனைவியை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் இம்ரான்கானின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக்கில் வெளிவந்துள்ளது.

இம்ரான்கான் மனைவி ரெஹாம்கானும் தனது விவாகரத்தை டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். விவாகரத்துக்கான காரணத்தை இருவருமே தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இம்ரான்கானின் கட்சியை சேர்ந்த நல் உல் ஹக் என்பவர், ‘ஊடகங்கள் இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும், ஊகங்களின் அடிப்படையில் இதுகுறித்து செய்தி வெளியிடுவதை தடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிபிசியில் பணிபுரிந்த ஜெமினா கோல்ட்ஸ்மித் என்பவரை இம்ரான்கான் கடந்த 1995ஆம் ஆண்டு திருமணம் செய்து பின்னர் 2004ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

English Summary: Imran Khan, Second Wife Reham Khan Divorce With Mutual Consent

கூறியுள்ளார்.

Leave a Reply