இளங்கோவனை நீக்க வேண்டும். ப.சிதம்பரம் உள்பட அதிருப்தி தலைவர்கள் ராகுல்காந்தியிடம் வலியுறுத்தல்

இளங்கோவனை நீக்க வேண்டும். ப.சிதம்பரம் உள்பட அதிருப்தி தலைவர்கள் ராகுல்காந்தியிடம் வலியுறுத்தல்
evks
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்பட தமிழகத்தின் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் நேற்று டெல்லியில் நேரில் வலியுறுத்தியுள்ளனர். நேற்று இக்குழுவினர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சனிக்கிழமை பிற்பகல் 1.45 மணிக்கு சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், கே.வி. தங்கபாலு மற்றும் வந்தவாசி கிருஷ்ணசாமி, குமரி அனந்தன், வசந்தகுமார், வள்ளல்பெருமாள், ராஜீவ் அறக்கட்டளையைச் சேர்ந்த முருகானந்தன், தாமோதரன், இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் காளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

1. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கட்சி வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடாமல் தனி நபர், அமைப்புகளுக்கு எதிரான காழ்ப்புணர்வு அரசியலில் ஈடுபடுகிறார்

2. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கான உத்திகளை வகுக்காமல் கட்சியை இளங்கோவன் தனது மனம் போக்கில் வழிநடத்தி வருவதால் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர்.

3. கட்சி நிர்வாகிகள் நியமனத்திலும், தங்கள் ஆதரவாளர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்காமல் தன்னிச்சையாக நியமனம் செய்கிறார்

4. அடுத்த தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்ற செயல் திட்டமும் அவரிடம் கிடையாது. அது பற்றி மூத்த தலைவர்களான தங்களுடனும் அவர் விவாதிப்பதில்லை. அரசியல் கட்சித் தலைவருக்குரிய தகுதியை வளர்த்துக் கொள்ளாமல், இயக்கத்துக்கு தலைமை தாங்கும் நபர் போல அவரது செயல்பாடு இருப்பதால் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் இளங்கோவன் மீது அதிருப்தியில் இருக்கின்றனர்.

5. எனவே இளங்கோவனை பதவியில் இருந்து நீக்கி விட்டு அனைவராலும் ஏற்கக் கூடிய ஒருவரை மாநிலத் தலைவராக நியமிக்க வேண்டும்.

6. தமிழகத்துக்கு ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களிடையே எழுச்சியை ஏற்படுத்த வேண்டும்

மேற்கண்ட குற்றச்சாட்டுக்களை ராகுல்காந்தியிடம் அதிருப்தி குழு தலைவர்கள் எடுத்துரைத்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன.

Leave a Reply