பிச்சை கேட்ட சிறுவனை காலால் எட்டி உதைத்த பெண் அமைச்சர்.

பிச்சை கேட்ட சிறுவனை காலால் எட்டி உதைத்த பெண் அமைச்சர். வீடியோ வெளியானதால் பரபரப்பு
MP minister
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் அமைச்சர் ஒருவர் ஒரு ரூபாய் பிச்சை கேட்ட சிறுவனை காலால் எட்டி உதைத்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தாயுள்ளம் கொண்ட பெண்கள், அதுவும் ஒரு அமைச்சர் இப்படி நடந்து கொள்ளலாமா? என சமூக வலைத்தளங்களில் அவருடைய செயலை கண்டித்து ஏராளமான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.                        

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பன்னா என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மொழிவாரி மாநிலங்கள்  பிரிக்கப்பட்டது குறித்து நடைபெற்ற ஒரு விழாவில் மத்திய பிரதேச மாநில மூத்த பெண் அமைச்சர்  குசும் மெதிலே அவர்கள் பங்கேற்க வந்தார். அவர் வரும் வழியில் அவருடைய காலைத் தொட்டு ஒரு சிறுவன் பிச்சை கேட்டதாகவும் இதனால் ஆத்திரமுற்ற பெண் அமைச்சர் அந்த சிறுவனை காலால் எட்டி உதைத்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த வீடியோ ஒன்று இன்று காலை முதல் இணையதளங்கள் மற்றும் சமூக இணையதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

English Summary: Shocking video of a BJP minister from MP kicking aside a child beggar.

Leave a Reply