எட்டு வருடங்களுக்கு பின்னர் அஜீத் செய்த சாதனை

எட்டு வருடங்களுக்கு பின்னர் அஜீத் செய்த சாதனை
ajith
ஆரம்ப காலகட்டத்தில் அஜீத் வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு படங்களில் நடித்து வந்தாலும், கடந்த சில வருடங்களாக அஜீத் நடிக்கும் படங்கள் வருடத்திற்கு ஒன்று என்ற அளவில்தான் ரிலீஸ் ஆகி வருகிறது. இந்நிலையில் இவ்வருடம் அஜீத்தின் இரண்டு படங்கள் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் கடந்த 2007ஆம் ஆண்டு அஜீத் நடித்த ஆழ்வார், கிரீடம், மற்றும் பில்லா ஆகிய மூன்று படங்கள் வெளியானது. எட்டு வருடங்கள் கழித்து 2015-ல் என்னை அறிந்தால்’ மற்றும் ‘வேதாளம்’ ஆகிய இரண்டு அஜீத் படங்கள் வெளியாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2012ஆம் ஆண்டு ‘பில்லா 2’ மற்றும் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ ஆகிய இரண்டு படங்களில் அஜீத் நடித்திருந்தாலும், இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply