தமிழக தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவுக்கு பதவி உயர்வு.

தமிழக தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவுக்கு பதவி உயர்வு.
sandheep
தமிழக தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வந்த சந்தீப் சக்சேனா அவர்களை இந்திய தேர்தல் துணைக்கமிஷனராக நியமனம் செய்து மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி யார் என்பது இன்று பிற்பகல் தெரியவரும் என கூறப்படுகிறது.

மத்திய அரசின் பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறையின் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள ஆணையில் சந்தீப் சக்சேனா, இந்திய தேர்தல் கமிஷனின் துணைக் கமிஷனராக 01.09.2015 அன்று முதலே நியமிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த பதவியில் சந்தீப் சக்சேனா பதவி ஏற்ற நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்கோ அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கும் வரையிலோ, இதில் எது முதலாவதாக நிகழ்கிறதோ அதுவரை இந்தப் பதவியில் அவர் நீடிப்பார்” என்று அந்த ஆணையில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply