இது முடி வளர்ச்சி மற்றும் முடி உடைவதை நீக்கி வலுபடுத்தவும் உதவுகிறது. இதில் எதிர்ப்பு அழற்சி அமிலங்கள் நிறைந்து உள்ளது சந்தையில் இருந்து சிறந்த ஆமணக்கு எண்ணெய் எப்படி தேர்ந்தெடுப்பது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தூய, இயற்கையான மற்றும் குளிர்படுத்தப்பட்ட ஆமணக்கு எண்ணெய் பயன்படுத்த வேண்டும். ஆமணக்கு எண்ணெய் இரவில் தூங்க செல்வதுக்கு முன்பு பயன்படுத்த வேண்டும். நல்ல பயனை பெற கீழ்வரும் இரண்டு வழிகளை பின்பற்றலாம்.
1. முதலில் சாதாரண நீர் கொண்டு உங்கள் முகம் மற்றும் கண்களை கழுவ வேண்டும். பின்பு நல்ல காய்ந்த துண்டு பயன்படுத்தி அதை துடைக்க வேண்டும். பின்பு சில துளி ஆமணக்கு எண்ணெயை எடுத்து தூரிகையால் கண் இமைகளின் தொடக்கத்தில் இருந்து பூச வேண்டும். ஆமணக்கு எண்ணெய் கண் இமைகளின் வேர்களை அடைவது முக்கியம் ஆகும். எனவே மிகுந்த கவனத்துடன் துல்லியமாக பண்ண வேண்டும். இது மாதிரி மற்றொரு கண் இமைகளுக்கும் பண்ண வேண்டும். கண் பகுதியில் எண்ணெய் இருந்தால் அதை தொடைத்து விடலாம். அடுத்த நாள் காலை கண் இமைகளை சுத்தம் பண்ணி விடலாம். இப்படி ஆமணக்கு எண்ணெய் கண் இமைகளுக்கு விட்டு வருவது முக்கியமானதாகும்.
2. கிளிசரின் மற்றும் முட்டை வெள்ளை கரு கலப்பு கிளிசரினுடன் முட்டை வெள்ளை கரு இரண்டு துளிகள் கலந்து கண் இமைகளுடன் பூச வேண்டும். இந்த கலவை கண் இமைகளை தடிமானாக, உறுதியாக மற்ற உதவுகிறது. அதே நேரத்தில் முட்டை வெள்ளை கருவில் இருக்கும் அதிகமான புரதம் கண் இமைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
3. ஆலிவ் எண்ணெய் சுகாதார நலன்கள் பொருட்டு ஆலிவ் எண்ணெய் உடன் ஆமணக்கு எண்ணெய் கலந்து கண் இமைகளுக்கு பூசலாம். ஆலிவ் எண்ணெய் கண் இமைகள் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் நிறைய புரதங்கள் மற்றும் தாதுக்கள் உடையது. இதுமாதிரி மற்ற பொருட்களுடன் இணைந்து பயன்படுத்தவதால் மிக அற்புதமான பயன் உண்டு என்று கண்டு அறியப்பட்டுள்ளது.