கான்பூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எம்.டெக் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இக்கல்வியாண்டில் 2015 எம்.டெக்.,(கெமிக்கல் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (மேனுபாக்சுரிங் சிஸ்டம்) ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.
கல்வித் தகுதியாக பொறியியலில் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் GATE நுழைவுத்தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அவசியம்.
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். ரூ.400 பொதுபிரிவினருக்கான கட்டணமும், ரூ.200 எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கும் விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 17 விண்ணப்பிக்கக் கடைசி தேதியாகும். கூடுதல் தகவல்களுக்கு ஐஐடி கான்பூர் இணையதள முகவரியைப் பார்க்கலாம்.