செல்வராகவனுடன் இணைந்த ‘நானும் ரெளடிதான்’ டீம்
தனுஷின் வொண்டர்பார் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த ஆயுத பூஜை தினத்தில் வெளியான விஜய்சேதுபதி-நயன்தாரா நடித்த ‘நானும் ரெளடிதான்’ திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்று தயாரிப்பாளருக்கும், விநியோகிஸ்தர்களுக்கும் நல்ல லாபத்தை பெற்றுத் தந்தது. இந்நிலையில் தனுஷின் தயாரிப்பில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தை தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்குவதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் ஐஸ்வர்யா சமீபத்தில் இந்த செய்தியை மறுத்ததால், இந்த படத்தின் இயக்குனர் யார்? என்ற கேள்வி எழுந்தது. தற்போது இந்த கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. சமீபத்தில் சிம்பு நடித்த ‘கான்’ படத்தை தயாரிப்பாளர் கிடைக்காத காரணத்தால் கைவிட்ட செல்வராகவன், தனுஷ்-விஜய்சேதுபதி படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது.
தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் இந்த படம் தயாராகவுள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வரும் என கூறப்படுகிறது