தூங்காவனத்தை ஓரங்கட்டிய ‘வேதாளம்’

தூங்காவனத்தை ஓரங்கட்டிய ‘வேதாளம்’
ajith and vijay
வரும் தீபாவளி தினத்தில் அஜீத் நடித்த ‘வேதாளம்’ மற்றும் கமல்ஹாசன் நடித்த ‘தூங்காவனம்’ ஆகிய இரண்டு படங்கள் வெளியாகவுள்ள நிலையில் சென்னை உள்பட பெரும்பாலான நகரங்களில் முக்கிய தியேட்டர்களில் ‘வேதாளம்’ படம் புக் செய்யப்பட்டு ரிசர்வேஷனும் தொடங்கிவிட்டது.

சென்னையில் ஏவிஎம் ராஜேஸ்வரி தவிர முன்னணி திரையரங்குகள் அனைத்திலும் ‘வேதாளம்’ திரையிடப்படுகிறது. அபிராமி தியேட்டரில் உள்ள நான்கு ஸ்கிரீன்களில் மொத்தம் 20 காட்சிகளில் 16 காட்சிகள் ‘வேதாளம்’ திரைப்படமும், 4 காட்சிகள் மட்டுமே தூங்காவனம்’ படமும் ரிலீஸ் ஆகிறது. 16 காட்சிகளுக்கும் ‘வேதாளம்’ டிக்கெட் ஒருசில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த நிலையில், 4 காட்சிகளுக்குரிய ‘தூங்காவனம்’ டிக்கெட்டுக்கள் இன்னும் முழுவதுமாக விற்பனையாகாமல் இருக்கின்றது.

இதேபோல் சென்னையில் உள்ள முக்கிய மால்கள் அனைத்திலும் மெயின் ஸ்க்ரீன்களை ‘வேதாளம்’ ஆக்கிரமித்து கொண்டதால், தூங்காவனம் படத்திற்கு சிறிய தியேட்டர்கள் மட்டுமே கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ‘வேதாளம்’ படத்தின் ஃபைனல் காப்பியை தயார் செய்வதில் இயக்குனர் சிவா இரவுபகலாக தீவிர முயற்சியில் உள்ளார். மேலும் இன்று நள்ளிரவு இந்த படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

English Summary: Vedhalam get more screens in Chennai than Thoongavanam

Leave a Reply