லாரியின் மீது மோதிய விமானம். வால்மார்ட் முன்னாள் தலைவர் காயம்

லாரியின் மீது மோதிய விமானம். வால்மார்ட் முன்னாள் தலைவர் காயம்
flight
விமானங்கள் தரையிறக்கப்படுவதற்கென ஓடுதளம் விமான நிலையங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் சிலசமயம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானங்கள் அவசர கிடைத்த இடத்தில் தரையிறங்குவதுண்டு. இந்நிலையில் நேற்று அமெரிக்காவில் பிரபல தொழிலதிபர் ஒருவர் சென்ற குட்டி விமானம் நடுரோட்டில் இறங்கி லாரியுடன் மோதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் கிளைகள் உள்ள வால்மார்ட்டின் முன்னாள் தலைவரும் அவருடைய இரண்டு நண்பர்களும் நேற்று குட்டி விமானம் ஒன்றில்  ஆர்கான்சஸ்சில் இருந்து டெக்சாஸ் நகருக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பாராசூட் மூலம் விமானத்தை விமானி நடுரோட்டில் இறக்கினார். அப்போது ரோட்டில் சென்று கொண்டிருந்த லாரியின் மீது விமானம் மோதியது. இதில் விமானத்தில் இருந்த கில்டிமோர் உள்பட 3 பேரும் லேசான காயமடைந்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=Rb0pXgeifAM

Leave a Reply