முதல் டெஸ்ட் போட்டி: தென்னாப்பிரிக்காவும் திணறல். 28 ரன்களுக்கு 2 விக்கெட்
இந்தியா-தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு இடையே நேற்று ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 201 ரன்களில் ஆல் அவுட் ஆன நிலையில், நேற்று மாலை தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்தது.
இந்திய அணியின் அபார பந்துவீச்சை சந்திக்க திணறிய தென்னாப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்கள் நிதானமாகவே ரன்கள் எடுத்தனர். இருப்பினும் 7வது ஓவரில் தென்னாப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர் வான் ஜில், அஸ்வின் பந்துவீச்சில் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் 9வது ஓவரில் தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர பேட்ஸ்பேன் டீபிளஸ்ஸிஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஜடேஜாவின் பந்துவீச்சில் போல்டானார். இதனால் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 28 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 173 ரன்கள் பின் தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இரண்டாவது ஆட்டம் தொடரவுள்ளது.