கர்நாடக முதல்வருக்கு பன்றிக்கறி பார்சலில் அனுப்பும் இந்து அமைப்பு. பெரும் பரபரப்பு
சமீபத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, நான் மாட்டிறைச்சி சாப்பிட முடிவெடுத்தால் என்னை யாரும் தடுக்க முடியாது என்று கூறியிருந்தார். இந்நிலையில் அவருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பாஜகவை சேர்ந்த சென்னபசப்பா எனபவர், “சித்தராமையா ஷிமேகா மாவட்டத்திற்கு வந்து பசுவை வெட்டி பார்க்கட்டும். அவரது தலையை நாங்கள் துண்டிப்போம்!” என்று, பகிரங்க மிரட்டல் விடுத்திருந்தார். இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
இந்த பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் ஸ்ரீராம் சேனா என்ற அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக், ” புனிதமான பசுவை வெட்டி சாப்பிடுவேன் என்று கூறும் முதல்வர் சித்தராமையா பன்றி இறைச்சியை சாப்பிட தயாரா? இதனை வெளிப்படையாக அறிவிக்க அவருக்கு தைரியம் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பினார்.
அதுமட்டுமின்றி ஒரு கிலோ பன்றி இறைச்சியையும் சித்தராமையாவுக்கு முத்தாலிக் பார்சல் அனுப்பி வைத்தார். இது போல் மாநிலம் முழுவதும் இருந்து முதல்வர் வீட்டுக்கு ஸ்ரீராம் சேனா அமைப்பினர் பன்றி இறைச்சி பார்சல் அனுப்பி வருகின்றனர். இதனால் கர்நாடகாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.