கனடா அமைச்சரையில் 3 இந்தியர்கள். புதிய பிரதமர் அதிரடி
இந்தியர்கள் உலகெங்கிலும் முக்கிய பதவிகளில் நியமனம் செய்யப்பட்டு வருவது குறித்து பல செய்திகளை நாம் கேள்விப்பட்டு வருகிறோம். அந்தவகையில் கனடா நாட்டில் மூன்று இந்தியர்கள் அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கனடாவில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் கனடாவில் வாழும் பஞ்சாபி சமூகத்தை சேர்ந்த ஒருசிலர் போட்டியிட்டனர். இந்நிலையில், கனடாவின் 23வது பிரதமராக 42 வயதான ஜஸ்டின் ட்ருடு தேர்வு செய்யப்பட்டார். இவர் கனடாவில் இளம்வயதில் பொறுப்பேற்ற 2வது பிரதமர் என்ற பெருமையை பெறுகிறார். இவரது அமைச்சரவையில், 42 வயதான கனடா வாழ் இந்தியர் ஹர்ஜித் சிங் பாதுகாப்பு துறை அமைச்சராகவும், 38 வயதான நவ்தீப் பெயின்ஸ் அறிவியல் மற்றும் பொருளாதார துறை அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.
இதேபோல் மற்றொரு சீக்கியரான அமர்ஜித் சோஹி என்பவருக்கு உள்கட்டமைப்பு துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் பஸ் டிரைவரான இவர், 1980களில் இந்திய சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவில் கடந்த 1997ஆம் ஆண்டு கனடாவாழ் இந்தியரான ஹெர்ப் தாலிவால் என்பவரும், கடந்த 2004ஆம் ஆண்டு உஜ்ஜால் தோசஞ் என்பவர் அமைச்சராக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.