‘வேதாளம்’ வெற்றிக்காக திருப்பதி சென்ற ‘தல அஜீத்’
அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேதாளம்’ திரைப்படம் வரும் 10ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், இன்று அஜீத் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.
ரஜினியை போலவே அஜீத்தும் ஒவ்வொரு படத்தின் ரிலீஸுக்கு முன்பும் திருப்பதி சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த முறை ‘வீரம்’ படம் வெளியாவதற்கு முன்னர் திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்த நிலையில் இன்று ‘வேதாளம்’ படத்தின் வெற்றிகாக அவர் திருப்பதி சென்றுள்ளார்.
அஜீத்துடன் அவருக்கு நெருக்கமானவர்களும் திருப்பதி சென்றுள்ளதாகவும், சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு இன்று இரவு அவர் சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
https://www.youtube.com/watch?v=S5HnqSxoS-M