சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் தடியடி. சிதறி ஓடிய அஜீத் ரசிகர்கள்

சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் தடியடி. சிதறி ஓடிய அஜீத் ரசிகர்கள்
albert 2 albert theatre
அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடித்த ‘வேதாளம்’ திரைப்படம் வரும் 10ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இந்த படத்தின் முதல் ஒருவாரத்திற்கான டிக்கெட்டுக்கள் ஏற்கனவே ஆன்லைன் மூலம் விற்று தீர்ந்துவிட்டது. குறிப்பாக முதல் நாள் முதல் காட்சி டிக்கெட்டுக்கள், ரிசர்வேஷன் தொடங்கிய ஒருசில நிமிடங்களில் விற்றுவிட்டது.

இந்நிலையில் சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் இன்று காலை வரும் 10ஆம் தேதிக்கான டிக்கெட்டுக்களை வழங்குவதற்காக கவுண்டர்கள் திறக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்த அஜீத் ரசிகர்கள் நூற்றுக்கணக்கில் குவிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

‘வேதாளம்’ படத்தின் முதல் காட்சியின் டிக்கெட்டுக்களை வாங்க ரசிகர்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்தால், ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கூட்டத்தினர்களை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதால் அஜீத் ரசிகர்கள் சிதறி நாலாபக்கமும் ஓடினர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதன் காரணமாக ஆல்பர்ட் திரையரங்க வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply