கருவிளையொண்மலர்காள்! காயா மலர்காள்! திருமால்
உருவொளி காட்டுகின்றீர் எனக்கு உய்வழக்கொன்று உரையீர்
திருவிளையாடு திண்தோள் திருமாலிரும்சோலை நம்பி
வரிவளையில் புகுந்துவந்தி பற்றும் வழக்குளதே.
பைம்பொழில் வாழ் குயில்காள்! மயில்காள்! ஒண்கரு விழைகாள்!
வம்பக்களங்கனிகாள்! வண்ணப்பூவை நறுமலர்காள்!
ஐம்பெரும்பாதர்காள்; அணிமாலிரும்சோலை நின்ற
எம்பெருமானுடைய நிறம் உங்களுக்கு என்செய்வதே !
– ஆண்டாள் (நாச்சியார்திருமொழி)