பாலில் எலுமிச்சை சாறு கலந்து உடம்பில் தேய்த்துக்குளிக்க, முகமும் தேகமும் பளிச்சிடும். வெந்நீரைவிட சாதாரண தண்ணீரில் குளிப்பது நல்லது. குளித்தபின் துணியால் அழுத்தித் துடைக்காமல் மென்மையாக ஒற்றி துடைப்பது சருமத்திற்கு பாதுபாப்பு. ரசாயனக் கலவையும், கொழுப்பு அமிலங்களும் நிறைந்த சோப்பு தேய்த்து குளிப்பதை விட வீட்டிலேயே கிடைக்கும் மஞ்சள்தூளும், சந்தனமும் எடுத்து ஆலிவ் எண்ணெயில் கலந்து உடம்பில் பூசி ஊற வைக்கவும்.
பின்னர் 15 நிமிடம் கழித்து குளிக்க, முகமும், தேகமும் மினுமினுக்கும். பீட்ரூட் அரைத்து சாறு எடுத்து அதனை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் காய வைக்கவும். பின்னர் தண்ணீரால் கழுவி துடைத்தால் முகம் பொலிவு பெறும். கொதிக்க வைத்த கேரட் சாறினை குளிரவைத்து பின்னர் முகத்திலும், உடம்பிலும் தேய்த்துக் குளிக்க, முகமும், தேகமும் பளபளப்பாகும்.
மஞ்சள்தூள் மற்றும் பாலாடை கலந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் பொலிவுடன் பிரகாசிக்கும். பச்சைப் பயிறு மாவு மற்றும் பாலாடை கலந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் பளபளப்பாகும்.