வெஜ் பட்டன்ஸ்

veg_2596614f

என்னென்ன தேவை?

கோதுமை மாவு – 2 கப்

கேரட் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்

சௌசௌ (நறுக்கியது) – 2 டேபிள் ஸ்பூன்

கோஸ் (நறுக்கியது) – 1 டேபிள் ஸ்பூன்

கீரை (நறுக்கியது) – 3 டேபிள் ஸ்பூன்

மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

காய்கறிகளை வேகவைத்து, மிக்ஸியில் அரைத்துக் கூழாக்கிக்கொள்ளுங்கள். கோதுமை மாவுடன் உப்பு மிளகாய்த் தூள் கலந்து காய்கறிக் கூழ் சேர்த்து பிசைந்துகொள்ளுங்கள். சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து, சிறு உருண்டைகளாக்கி, மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள். இந்த வெஜ் பட்டன்ஸ், கரகரவென்று சாப்பிடச் சுவையாக இருக்கும். சத்தானதும்கூட. சிப்ஸ் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த ஆரோக்கிய நொறுக்கைச் செய்துதரலாம்.

Leave a Reply