UAE நாட்டில் ‘வேதாளம்’ செய்த புதிய சாதனை
நேற்று முன் தினம் வெளியான அஜீத்தின் ‘வேதாளம்’ திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூலை குவித்து கொண்டிருக்கும் நிலையில் இன்று முதல் ‘வேதாளம்’ UAE நாட்டில் வெளியாகிறது. இந்த நாட்டில் ‘வேதாளம்’ மொத்தமாக 43 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதுவரை எந்தவொரு அஜீத் படமும் இவ்வளவு அதிகமான திரையரங்குகளில் ரிலீஸ் ஆனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் UAE நாட்டில் விஜய்யின் கத்தி 31 திரையரங்குகளிலும், ‘புலி’ 39 திரையரங்குகளிலும் ரிலீஸ் ஆனதே அதிகபட்சமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த இரு படங்களும் போட்டியின்றி சோலோவாக ரிலீஸ் ஆனது.
ஆனால் ‘வேதாளம்’ திரைப்படம், கமல்ஹாசனின் ‘தூங்காவனம்’ படத்தின் போட்டியையும் தாண்டி 47 திரையரங்குகளில் இந்த நாட்டில் ரிலீஸ் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.