தலைசிறந்த பல்கலைக்கழக பட்டியலில் முதல்முறையாக இந்திய பல்கலைக்கழகம்.

தலைசிறந்த பல்கலைக்கழக பட்டியலில் முதல்முறையாக இந்திய பல்கலைக்கழகம்.
university
உலகில் செயல்பட்டு வரும் தரமான பல்கலைக்கழகங்கள் பட்டியலில் முதல்முறையாக இந்திய பல்கலைக்கழகம் ஒன்றின் பெயர் இடம்பெற்றுள்ளது.

‘டைம்ஸ் ஹையர் எஜுகேசன்’ என்ற இதழ் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்கள் குறித்த சர்வே ஒன்றை சமீபத்தில் எடுத்தது. இந்த சர்வேயின் முடிவு நேற்று வெளியானது. இதில் பெங்களுரு நகரில் செயல்பட்டு வரும் இந்திய அறிவியல் நிறுவனத்துக்கு ( ஐஐஎஸ்சி) 99வது இடம் கிடைத்துள்ளது.

இந்த பட்டியலில் அமெரிக்காவை சேர்ந்த, ஸ்டான்ஃபோர்ட், கால்டெக் மற்றும் மசாசூசெட்ஸ் ஆகிய பல்கலைக்கழகங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. அதேவேளையில் கடந்த ஆண்டு இந்த பட்டியலில் அமெரிக்காவை சேர்ந்த 34 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்திருந்தன. இந்த ஆண்டு 31 பல்கலைக்கழகங்களே இடம் பெற்றுள்ளன.

மேலும் ஆசிய நாடுகளை சேர்ந்த 22 பல்கலைக்கழகங்கள் கடந்த ஆண்டு பட்டியலில் இடம் பெற்றிருந்தன. இந்த ஆண்டு 25 ஆக அதிகரித்துள்ளது. இதில் முதல் 30 இடங்களுக்குள் ஆசியாவை சேர்ந்த 6 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பட்டியலில் இந்திய கல்வி நிறுவனம் ஒன்று இடம் பிடிப்பது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் முதல் பத்து இடங்களை பிடித்த பல்கலைக்கழகங்களின் பெயர்கள் வருமாறு

1     Stanford University                                     United States
2     California Institute of Technology (Caltech)     United States
3     Massachusetts Institute of Technology (MIT)   United States
4     University of Cambridge                                United Kingdom
5     University of California, Berkeley                    United States
6     University of Oxford                                      United Kingdom
7     Princeton University                                        United States
8     ETH Zurich – Swiss Federal Institute of Technology Zurich     Switzerland
9     Imperial College London                              United Kingdom
10     Carnegie Mellon University                        United States

Leave a Reply