தீவிரவாதிகளை ஒழிக்க பிரான்ஸுக்கு உதவ தயார். இந்தியா அறிவிப்பு

தீவிரவாதிகளை ஒழிக்க பிரான்ஸுக்கு உதவ தயார். இந்தியா அறிவிப்பு
france
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய வெறித்தனமான தாக்குதலுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த பிரான்ஸ் நாடு, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலைகளின் மீது வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் பிரான்சுக்கு உதவ இந்தியா தயார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலைகளின் மீது வான்வழி தாக்குதல் நடத்தி வரும் பிரான்ஸ் நாட்டிற்கு அமெரிக்கா, ரஷ்யா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்க அனைத்து விதத்திலும் பிரான்சு நாட்டிற்கு உறுதுணையாக இந்தியா நிற்கும் என்று கூறினார்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்துள்ளதால் மிக விரைவில் இந்த இயக்கம் முற்றிலும் அழிக்கப்படும் என கூறப்படுகிறது.

English Summary: India extends help to France in fight against terror

Leave a Reply