மோடி பதவியிறங்கும் வரை காத்திருங்கள். பாகிஸ்தான் டிவிக்கு பேட்டி அளித்த மணிசங்கர ஐயர்?

மோடி பதவியிறங்கும் வரை காத்திருங்கள். பாகிஸ்தான் டிவிக்கு பேட்டி அளித்த மணிசங்கர ஐயர்?
manisangara iyyar
இந்திய பிரதமர் மோடி அகற்றப்பட்ட பின்னர் இந்திய-பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகள் தொடங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் பாகிஸ்தான் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அவருடைய இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் துனியா டிவி என்ற தொலைக்காட்சியின் நேரடி விவாதத்தில் கலந்து கொண்ட மணிசங்கர ஐயர் பேசியதாவது, “முதலில் மோடியை அகற்ற வேண்டும், அதன் பிறகே பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும். நாம் 4 ஆண்டுகாலம் இதற்காகக் காத்திருக்க வேண்டும். விவாதத்தில் பங்கேற்றவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர், ஆனால் மோடி சாஹப் இருக்கிறாரே, பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை.

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். அவர்களை அகற்ற வேண்டும். இதைத்தவிர இந்திய-பாகிஸ்தான் உறவுகள் மேம்பட வேறு வழியில்லை. நாங்கள் அவர்களை அகற்றிவிடுவோம், ஆனால் அதுவரை பாகிஸ்தான் காத்திருக்க வேண்டும்” என்று கூறினார்

மணிசங்கர ஐயரின் இந்த பேச்சுக்கு பாஜக தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. இவருடைய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தவர்கள் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியின் டாம் வடக்கன்: “இது அர்த்தமற்ற குற்றச்சாட்டு. இது பற்றி மணி சங்கர் எழுதிய கடிதம் என்னிடம் உள்ளது, இதில் அவர் உறுதியாக இந்தச் செய்தியை மறுத்துள்ளார்”

பாஜக செய்தித் தொடர்பாளர் நளின் கோலி: “இந்தியாவுக்கு எதிரான ஒருநாட்டில், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு நாட்டில் ஒரு வாரகாலத்துக்குள் மூத்த காங்கிரஸ் தலைவர்களான மணி சங்கர் மற்றும் சல்மான் குர்ஷித் இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியுள்ளனர் என்பது மிகவும் மோசமானது, கவலையளிக்கக் கூடியது”

ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் மனோஜ் ஜா:, “எல்.கே.ஜி மாணவர் கூட இவ்வாறு பேசியிருக்க மாட்டார், குறைந்தபட்ச திடமான மனநிலையில் உள்ளவர்கள் கூட மணி சங்கரின் இந்தக் கூற்றுக்கு கண்டனம் தெரிவிப்பர்

Leave a Reply