கருவில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள்

ac6a57fb-f6e4-45f1-9a76-b60dfa9503fd_S_secvpf

கர்ப்பமாக இருக்கும் போது பெண்களுக்கு ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளின் மீது ஏற்படும் ஆசைக்கு அளவே இருக்காது. நிறைய கர்ப்பிணிகளுக்கு நூடுல்ஸ் மீது ஆசை ஏற்படும். ஆனால் அந்த உணவுப் பொருட்கள் அனைத்தும், வயிற்றில் வளரும் சிசுவிற்கு மிகவும் ஆரோக்கியமற்றது. அதுமட்டுமின்றி, இந்த உணவுகள் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும்.

எனவே கர்ப்பிணிகள் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை தொடாமல் இருப்பதே நல்லது. அதிலும் குறிப்பிட்ட உணவுகளை சாப்பிட நினைக்காமல் இருப்பது நல்லது. இதனால் குழந்தை ஆரோக்கியமாக வளர்வதோடு, பிரசவத்திற்கு பின் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். ஏனெனில் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளில் கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் அளவுக்கு அதிகமாக இருப்பதால், இவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

நூடுல்ஸில் கலோரிகள் அதிகம் உள்ளதால், இதனை சாப்பிட்டால், கர்ப்ப காலத்தில் எடை அதிகரிக்க நேரிடும். மேலும் இதனை அதிகம் சாப்பிட்டால், மீண்டும் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க முடியாது. எண்ணெயில் பொரித்த எந்த ஒரு உணவுப்பொருளையும் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது. குறிப்பாக பிரெஞ்சு ப்ரைஸை, சிக்கன் பிரைய் போன்றவற்றை தொடவேக் சுடாது.

ஃபாஸ்ட் ஃபுட் உணவிலேயே மிகவும் மோசமான ஒரு உணவுப் பொருள் என்றால் அது பர்கர் தான். தற்போது நிறைய பேர் உடல் பருமனால் அவஸ்தைப்படுவதற்கு முக்கிய காரணமே, இந்த பர்கர் தான். ஆகவே கர்ப்ப காலத்தில் இதனை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. பிட்சாவின் மேலே தூவப்படும் பொருட்கள், வயிற்றில் வளரும் சிசுவிற்கு மிகவும் மோசமானவை. ஆகவே இதனை கர்ப்ப காலத்தில் அறவே தவிர்க்க வேண்டும்.

Leave a Reply