அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து திடீரென விலகிய இந்தியர்

அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து திடீரென விலகிய இந்தியர்
bobby jindal
வரும் 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியர் பாபி ஜிண்டால் போட்டியிட உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் திடீரென போட்டியில் இருந்து விலகினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அமெரிக்க அதிபர் ஒப்பாமாவில் பதவிக்காலம் அடுத்த ஆண்டில் முடிவடையவுள்ளதால் புதிய அதிபருக்கான தேர்தல் 2016ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியுமான ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதிகள் ஜார்ஜ் எச். டபிள்யு புஷ்ஷின் மகனும், ஜார்ஜ் டபிள்யு புஷ் சகோதரருமான ஜெப் புஷ் அவர்களும், போட்டியிட உள்ளனர்.

இதனிடையே குடியரசு கட்சி சார்பில் பாபி ஜிண்டாலும் போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் பாபி ஜிண்டாலுக்கு குடியரசு கட்சியில் போதிய ஆதரவு இல்லாத்தால், அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் இருந்து பாபி ஜிண்டால் விலகிக் கொண்டதாக அவரது பிரசார செயலாளர் அறிவித்துள்ளார். இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் பிரபல ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றும் செய்தி வெளியிட்டுள்ளது.;

பாபிஜிண்டால் தற்போது லூசியானா மாநில கவர்னராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply