பிரான்ஸ் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி தற்கொலையா?

பிரான்ஸ் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி தற்கொலையா?
paris attack
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட 28வயது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி அல்டெல்ஹமித் அபவுட் என்பவன் போலீஸாரால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தனிப்படை அமைத்து பிரான்ஸ் போலீஸார் இந்த தீவிரவாதியை தேடி வந்த நிலையில் நேற்று பிரான்ஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கியிருப்பதாக வந்த செய்தியை அடுத்து அந்த கட்டிடத்தை போலீஸார் சுற்றி வளைத்தனர்.

தீவிரவாதிகளுக்கு, போலீஸாருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்ததாகவும், தீவிரவாதியை போலீசார் நெருங்கிவிட்ட காரணத்தால் தீவிரவாதி அல்டெல்ஹமித் அபவுட் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து இந்திய தொலைக்காட்சி ஒன்றிற்கு பிரெஞ்சு தூதரான பிராங்கோயிஸ் ரெய்ச்சர் அளித்த பேட்டியில், “செயின்ட் டெனிஸ் நகரில் இன்று நடந்த தேடுதல் வேட்டையின் போது அப்டெல்ஹமித் அபவுட் தற்கொலை செய்து கொண்டதற்கான அறிகுறிகள் தெரிகிறது. அபவுட் இறந்து விட்டான் என்ற இறுதி முடிவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.” என்று கூறினார். இருப்பினும் ஒருசில பிரான்ஸ் ஊடகங்கள் பிரான்ஸ் போலீஸார் அந்த தீவிரவாதியை சுட்டு கொலை செய்ததாக செய்தி வெளியிட்டுள்ளன.

பிரான்ஸ் தாக்குதல் மட்டுமின்றி பெல்ஜியம் நாட்டில் இந்த தீவிரவாதி மீது பல வழக்குகள் இருப்பதாகவும், பெல்ஜியம் நீதிமன்றம் இவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

English Summary: Paris attacks: Abdelhamid Abaaoud ‘killed’ in police raid on Saint-Denis apartment

Leave a Reply