தென்சீன தீவுப்பிரச்சனையில் தலையிட வேண்டாம். ஒபாமாவுக்கு சீனா எச்சரிக்கை

தென்சீன தீவுப்பிரச்சனையில் தலையிட வேண்டாம். ஒபாமாவுக்கு சீனா எச்சரிக்கை
obama
கடந்த சில வருடங்களாக தென்சீன கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருவதையும், ஜப்பான் மற்றும் கொரிய நாடுகளுக்கு சொந்தமான தீவுகளை சீனா கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதையும் அமெரிக்கா அவ்வப்போது எச்சரிக்கை செய்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பிலிப்பைன்ஸ் அதிபர் பெனிக்னோ அகினோ அவர்களை அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்தார். இந்த சந்திப்பை அடுத்து இரு தலைவர்களும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ஒபாமா பேசும் போது, ‘தென்சீன கடலில் மற்ற நாடுகளுக்கு சொந்தமான தீவுகளை ஆக்கிரமிப்பு செய்யாமல், புதிய தீவுகளை சீனா உருவாக்கி கொள்ளலாம்’ என்று தெரிவித்தார்.

ஒபாமாவின் இந்த கருத்துக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுதுறை ஹாங்லி கூறியதாவது: தென்சீன கடல் பகுதி பிரச்சினையில் தேவையில்லாமல் ஒபாமா தலையிட வேண்டாம். இந்த விவகாரத்தில் விளையாடுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அமெரிக்காவின் தலையீட்டால் தெற்கு சீன கடல் பகுதி நாடுகள் மத்தியில் பதட்டம் உருவாக்கப்படுகிறது. இது தொடரக்கூடாது என்று கூறினார்

English Summary: South China Sea row: Beijing warns Obama to stay out

Leave a Reply