மு.க.ஸ்டாலின் நடித்த குறும்படத்திற்கு அனுமதி மறுப்பு. நீதிமன்றம் முக்கிய உத்தரவு

மு.க.ஸ்டாலின் நடித்த குறும்படத்திற்கு அனுமதி மறுப்பு. நீதிமன்றம் முக்கிய உத்தரவு
stalin
திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், திமுகவின் பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களாக ‘நமக்கு நாமே’ என்ற பிரச்சாரத்தில் தமிழகம் முழுவதும் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்த குறும்படம் ஒன்றில் அவர் நடித்தார்.

இந்த குறும்படத்தை சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் எல்.இ.டி திரை அமைத்து திரையிட திமுகவினர் முடிவு செய்திருந்த நிலையில், சென்னை மாநகராட்சி இதற்கு அனுமதி மறுத்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அனுமதி மறுத்தார்.

ஆணையரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.  இந்த வழக்கை நேற்று விசாரணை செய்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், இதுகுறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டார்.  மேலும் இந்த வழக்கு வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

English Summary: Denial of permission to broadcase M.K.Stalin’s Short film

Leave a Reply