”பசுவை கொல்பவர்களுக்கு இந்தியாவில் வாழ உரிமை கிடையாது. காங்கிரஸ் முதல்வர்
பாரத பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றதில் இருந்து சிறுபான்மையானவர்களுக்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக பசுவை கொல்ல ஒருசில மாநிலங்கள் தடை விதித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பசுவை கொல்பவர்கள் இந்தியாவின் மிகப்பெரிய எதிரி என்று உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை பாஜகவை சேர்ந்தவர்கள் மட்டுமே பசுவதைக்கு எதிராக குரல் கொடுத்த நிலையில் முதன்முதலாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உத்தரகாமுதல்வர் ஹரிஷ் ராவத் இதுகுறித்து கருத்து தெரிவித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
ஹரித்துவாரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத், ”பசுவை கொல்பவர்களுக்கு இந்தியாவில் வாழ உரிமை கிடையாது. பசுவை கொபவர்கள் யாராக இருந்தாலும், எந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் இந்தியாவின் மிகப்பெரிய எதிரி. அவர்களுக்கு நாட்டில் வாழ உரிமை கிடையாது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பசுவை கொல்பவர்களை சட்டம் பார்த்துக்கொள்ளும். பசுக்களை பாதுகாக்க மாநில அரசு எதனையும் செய்யும்.
எனது அரசில், பசுக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சில பரிந்துரைகளை நான் தாக்கல் செய்துள்ளேன். நாட்டில் முதல்முறையாக உத்தரகாண்ட் மாநிலம் மட்டுமே பசுக்களுக்கு கொட்டகை அமைத்து, தீவணமும் வழங்கி வருகிறது” என்றார்.