ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான ஃசைபர் போர். 10,000 டுவிட்டர் கணக்குகள் முடக்கம்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான ஃசைபர் போர். 10,000 டுவிட்டர் கணக்குகள் முடக்கம்
isis
சமீபத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதால் பிரான்ஸ் உள்பட ஐரோப்பிய நாடுகள் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தை முழுவதுமாக அழிக்க சபதம் ஏற்றுள்ளன.

இந்நிலையில் முதல்கட்டமாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் இணைய பயனாளிகளை ஒழிப்பதில் அனானிமஸ் என்ற அமைப்பு முடிவு செய்துள்ளது. இந்த இயக்கத்தின் தீவிர நடவடிக்கையால் முதல்கட்டமாக 900 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன.

இரண்டாவது கட்டமாக தற்போது 10,000க்கும் மேற்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் டுவிட்டர் கணக்குகளை முடக்கியுள்ளதாக கூறப்படுகிறாது. அனானிமஸ் அமைப்பினரின் இந்தத் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என்றும், இணைய உலகை எங்கள் வசமாக்குவோம் என்றும் ஐ.எஸ். அமைப்பினர் சவால் விட்டு வருகின்றனர். மேலும் ‘பிரான்ஸ் நாட்டுக் கொடியின் மீது ஷூ வைத்திருக்கும் படத்தை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் தங்களது சமூக வலைதளங்களில் புரொஃபைல் பிக்சராக மாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

 ‘அனானிமஸ்’ அமைப்புக்கும், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்து வரும் சைபர் போர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English Summary: Anonymous’s Cyber War with ISIS Could Compromise Terrorism Intelligence

Leave a Reply