ஜெயலலிதாவுக்கு ஏன் நிதீஷ்குமார் அழைப்பு விடுவிக்கவில்லை. ரகசியத்தை போட்டு உடைத்த ஸ்டாலின்
சமீபத்தில் நடைபெற்ற பீகார் சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற நிதீஷ்குமார் மற்றும் லாலு கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து நேற்று நிதீஷ்குமார் முதல்வராகவும், லாலுவின் மகன் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர். இந்த பதவியேற்புவிழாவுக்கு திமுக தலைவர் கருணாநிதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கருணாநிதி சார்பில் அவரது மகன் ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் இந்த பதவியேற்பு விழாவுக்கு பல மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுக்காதது ஏன் என்ற ரகசியத்தை நேற்று மு.க.ஸ்டாலின் போட்டு உடைத்தார்.
பீகாரில் நிதீஷ்குமார் தலைமையிலான மெகா கூட்டணி வெற்றி பெற்றபோதே ஜெயலலிதா அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றும் இதன் காரணமாக அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் மத்திய அரசு தரவுள்ள வெள்ள நிவாரண நிதியை தேர்தல் ஆதாயத்துக்காக அ.தி.மு.க. அரசு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அப்படி தேர்தல் ஆதாயத்துக்காக நிதியை அ.தி.மு.க. அரசு பயன்படுத்தினால், அதை கண்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்” என்றும் அவர் கூறினார்.