கொட்டித் தீர்த்த மழையால் உங்கள் வீடு சேதம் அடைந்திருக்கிறதா? வீட்டுக்குக் காப்பீடு எடுத்து அதற்கு முறையாகப் காப்பீட்டுத் தொகையைச் செலுத்தி வருகிறீர்களா? அப்படியானால், வீட்டுக்கான காப்பீட்டுத் தொகையை இழப்பீடாகப் பெற முடியுமே.
இந்தியாவில் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை 24 நிறுவனங்கள் வழங்கிவருகின்றன. பொதுக் காப்பீட்டுத் திட்டங்களை 28 நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இதில் வீட்டுக்கான காப்பீடும் ஒன்று. இந்தக் காப்பீடு மூலம் பொதுவாகத் திருட்டு, தீ விபத்து, மழை, நிலநடுக்கம், தீவிரவாதிகள் தாக்குதலில் வீடு பாதிப்பு, தீ, மின் கசிவினால் ஏற்படும் தீ விபத்து உள்ளிட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு பெற முடியும். காப்பீட்டு எடுத்திருப்பதால் மட்டுமே இழப்பீடு கேட்டால் காப்பீட்டு நிறுவனங்கள் உடனே இழப்பீடு தொகையைத் தந்துவிடுவார்கள் என்று நினைக்க வேண்டாம். இயற்கைப் பேரழிவால் வீடு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதற்காக அத்தாட்சிகளை அளிக்க வேண்டும்.
உங்கள் வீடு மழையால் சேதம் அடைந்திருப்பது தெரிய வந்தால், அது பற்றி உடனடியாகக் காப்பீட்டு நிறுவனத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். இதில் கால தாமதம் செய்யக் கூடாது. எந்த இடத்தில் சேதம் ஏற்பட்டிருக்கிறது, சேதத்தின் தன்மை, சேதத்தின் மதிப்பு, எதிர்பாக்கும் இழப்பீடு போன்ற விவரங்களைக் காப்பீட்டு நிறுவனத்துக்கு அறிக்கையாக அளிக்க வேண்டும். இதை இழப்பீடு பெறுவதற்கான பதிவாகக் காப்பீட்டு நிறுவனங்கள் பதிவு செய்துகொள்ளும். காப்பீட்டு நிறுவனத்திலிருந்து வந்து ஆய்வுசெய்து அவர்களும் காப்பீட்டு நிறுவனத்துக்கு அறிக்கை தருவதுண்டு.
உங்கள் வீடு மழையால் சேதம் அடைந்திருப்பது தெரிய வந்தால், அது பற்றி உடனடியாகக் காப்பீட்டு நிறுவனத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். இதில் கால தாமதம் செய்யக் கூடாது. எந்த இடத்தில் சேதம் ஏற்பட்டிருக்கிறது, சேதத்தின் தன்மை, சேதத்தின் மதிப்பு, எதிர்பாக்கும் இழப்பீடு போன்ற விவரங்களைக் காப்பீட்டு நிறுவனத்துக்கு அறிக்கையாக அளிக்க வேண்டும். இதை இழப்பீடு பெறுவதற்கான பதிவாகக் காப்பீட்டு நிறுவனங்கள் பதிவு செய்துகொள்ளும். காப்பீட்டு நிறுவனத்திலிருந்து வந்து ஆய்வுசெய்து அவர்களும் காப்பீட்டு நிறுவனத்துக்கு அறிக்கை தருவதுண்டு.
இழப்பீடுக்கான படிவம், வாடிக்கையாளரிடம் இருக்கும் காப்பீடு எடுத்ததற்கான சான்றிதழ் போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு காப்பீட்டு நிறுவனங்கள் கேட்கும் ஆவணங்களையும் சான்றிதழ்களையும் முறையாக அளிக்க வேண்டும். எல்லாமும் முறையாக இருந்தால் பெரும்பாலும் 15 நாட்களுக்குள் காப்பீட்டு இழப்பீடு கிடைத்துவிடும். சொத்து தவிர்த்து வீட்டில் உள்ள டி.வி., ஃபிரிட்ஜ் உள்ளிட்ட மின்னணுப் பொருட்கள், ஃபர்னிச்சர்கள், தங்க, வைர நகைகள் போன்றவற்றுக்கும் இந்தக் காப்பீடு வைத்திருந்தால் இழப்பீட்டைப் பெற முடியும்.
வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் இது போன்ற இழப்பீட்டைப் பெற முடியும். வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் வீடு தவிர்த்து, வீட்டில் உள்ள பொருட்களுக்குக் காப்பீடு எடுத்திருந்தால் காப்பீடு மூலம் இழப்பீடு பெற முடியும். அதற்கு வீட்டுக் காப்பீடு உதவுகிறது. வீட்டுக் காப்பீடு கோரும்போது ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். விபத்து நடந்தபோது உங்கள் காப்பீடு காலாவதியாகமல் இருக்க வேண்டும். காப்பீட்டுத் தொகையை முறையாகச் செலுத்தாதபட்சத்தில் காப்பீடு காலாவதியாகிவிடும். விபத்து நேர்ந்த பிறகு காப்பீடு தொகையைச் செலுத்தி அதன் பிறகு இழப்பீடு கோரினால் கிடைக்காது.
வீட்டுக் கடன் காப்பீடு
இப்போதெல்லாம் வீட்டுக் கடன் வாங்கும்போதே வங்கிகள் வீட்டுக் கடன் காப்பீடு எடுத்துக் கொடுப்பதுண்டு. காப்பீட்டாளர் உயிரிழந்தால், வீட்டுக் கடனைக் காப்பீடு மூலம் இழப்பீடாகப் பெறுவதற்கான காப்பீடு இது. ஆனால், இப்போதெல்லாம் வீட்டுக் கடன் காப்பீட்டிலேயே விபத்து, பேரிடர் பாதிப்புகளுக்கும் சேர்த்தே சில வங்கிகள் காப்பீடு கொடுத்துவிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் வீடு தவிர்த்து, வீட்டில் உள்ள பொருட்களுக்குக் காப்பீடு எடுத்திருந்தால் காப்பீடு மூலம் இழப்பீடு பெற முடியும். அதற்கு வீட்டுக் காப்பீடு உதவுகிறது.