தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களிலும் உணவு பாதுகாப்பு சட்டம். ராம்விலாஸ் பாஸ்வான்

தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களிலும் உணவு பாதுகாப்பு சட்டம். ராம்விலாஸ் பாஸ்வான்
ram vilas
கடந்த காங்கிரஸ் அரசு கொண்டு உணவு பாதுகாப்பு சட்டம் தமிழகம் தவிர மீதியுள்ள அனைத்து மாநிலங்களிலும் வரும் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் செயல்படுத்தப்படும் என மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத்தின்படி நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் 2 பங்கு ஏழை மக்களுக்கு மானிய விலையில் 5 கிலோ உணவு தானியங்கள் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டது. மேலும், இந்த 5 கிலோ தானியங்களும் ரூ.1 முதல் 3 ரூபாய்க்கு வழங்கப்படும்.

இந்த சட்டத்திற்கு முதலில் தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் மற்ற மாநிலங்கள் படிப்படியாக இந்த சட்டத்தை அமல்படுத்த தொடங்கிவிட்டதாகவும், தற்போது நாட்டில் 22 மாநிலங்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த தொடங்கி விட்டதாகவும், 14 மாநிலங்கள் சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களும் உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல் படுத்த ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் உணவு தானிய அளவு குறைக்கப்பட்டுவிட்டதால் இந்த சட்டத்தை அமல்படுத்த தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

English Summary: All States Except Tamil Nadu to Implement Food Law by March 2016: Ram Vilas Paswan

Leave a Reply